தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் துறையினர் பொறுப்புணர்வுக்கு பொதுமக்கள் பாராட்டு

கோவை:பொள்ளாச்சியில் சேதமடைந்த சாலையில் விபத்தை ஏற்படுத்தும் கம்பிகளை வெட்டி எடுத்த காவல் துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Public appreciation for police accountability

By

Published : Nov 11, 2019, 7:21 AM IST

பொள்ளாச்சி மீன்கரை சாலை தமிழ்நாடு - கேரளா செல்லும் பிரதான சாலையில் இரவு பகலாக வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும். இந்த சாலையில் சீனிவாசபுரத்தில் நெடுஞ்சாலை துறை மூலம் ரயில்வே கீழ்மட்ட பாலம் கட்டப்பட்டது.

பாலத்தின் கீழ் சாலை தரமாக அமைக்கப்படாததால் சாலையின் கான்கிரீட் பெயர்ந்து இரும்புக் கம்பிகள் வெளியே தெரிந்தபடி உள்ளன. இதன் காரணமாக, அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர்.

ரயில்வே கீழ்மட்ட பாலம்

இந்நிலையில் நேற்று அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய எஸ்ஐ முத்துச்சாமி, காவலர்கள் மார்கண்டன், தினேஷ் ஆகியோர் வாகனங்கள் தடையின்றி பாதுகாப்பாக செல்லும் விதமாக சாலையில் இருந்த கம்பிகளை வெட்டி எடுத்தனர்.

இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் எந்த சிரமமும் இல்லாமல் சென்று வருகின்றனர். காவலர்கள் சாலையை சீரமைத்த காட்சியை பார்த்த பொதுமக்கள் அவர்களின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து சென்றனர்.

சேதமடைந்த சாலையில் காவல்துறையினர் கம்பிகளை வெட்டி எடுக்கும் காட்சி

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது,‘‘சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டியது நெடுஞ்சாலைத் துறையின் பொறுப்பு. சாலையில் நீட்டிக் கொண்டிருக்கும் கம்பிகளை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டியது தனது துறையின் பணி இல்லை என தட்டி கழிக்காமல் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும் விபத்து ஏற்படுத்தும் விதமாக நீட்டிக் கொண்டிருந்த கம்பிகளை அகற்றிய காவல் துறையினரின் பொறுப்புணர்வு பாராட்டதக்கது’’ என்றனர்.

இதையும் படிக்க: 'வாழத்தான் வழியில்லை, நிம்மதியாக சாக விடுங்கள்' - கண்ணீர் விடும் பட்டியலின மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details