கோவை சுங்கம் பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது (21), கடந்த 3ஆம் தேதியன்று காலை 11 மணியளவில், வீட்டின் கதவை பூட்டி கொண்டு பப்ஜி (PUBG) விளையாடிக் கொண்டிருக்கிறார். அவரது பெற்றோர்கள் வெளியே சென்றுள்ள நிலையில், அன்று மதியம் தொலைபேசியில் அமீதுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். போனை எடுக்கவில்லை எனத்தெரிகிறது.
பின், வீட்டிற்கு வந்து கதவை தட்டி உள்ளனர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அமீது வாயில் நுரை தள்ளிய படி, நாக்கை கடித்தவாறு சுயநினைவின்றி இருந்துள்ளார். உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சை பலனின்றி வலிப்பு வந்து உயிரிழந்ததாகக் கூறுகின்றனர்.