கோவை: பெட்ரோல், டீசல் விலை ரூ.100க்கு மேல் கடந்து செல்லும் நிலையில், பெட்ரோல் பங்குகளில் உள்ள பிரதமர் மோடி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் போராட்டம் நடத்தப்படும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நேற்று அக்.26ஆம் தேதி அறிவித்திருந்தனர்.
ஆர்ப்பாட்டம்
அவிநாசி சாலையில் தனியார் மருத்துவமனை அருகில் பெட்ரோல் பங்கில் இருந்த பிரதமர் மோடி படம் அகற்றப்பட்டது. எனினும், பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் வந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பெட்ரோல் பங்க் முன்பாக பிரதமர் மோடி படத்துடன் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். பின்னர், பிரதமர் மோடியின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.