தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்வாரிய அலுவலகத்தை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு - கிராம மக்கள் சாலை மறியல்

மின்வாரிய அலுவலகத்தை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

கிராம மக்கள் சாலை மறியல்
கிராம மக்கள் சாலை மறியல்

By

Published : Mar 18, 2021, 4:35 PM IST

தர்மபுரி மாவட்டம் இண்டூரில் செயல்பட்டுவந்த உதவி மின் பொறியாளர் மற்றும் இயக்கமும் பராமரிப்பும் அலுவலகத்தை அதகபாடி என்ற இடத்திற்கு இடம் மாற்றுவதைக் கண்டித்து, இண்டூர் பேருந்து நிலையம் முன்பு தர்மபுரி - ஒகேனக்கல் சாலையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சுற்றுவட்டார கிராம மக்கள் பல ஆண்டுகளாக இந்த அலுவலகத்தில் மின் கட்டணங்களைச் செலுத்துவது, புதிய மின் இணைப்புப் பெறுவது உள்ளிட்டவைகளுக்கு இந்த அலுவலகம் வசதியாக இருந்ததாகவும், திடீரென இடம் மாற்றம் செய்வதால் பல்வேறு வகையிலும் சிரமம் ஏற்படும், அதனால் இடமாற்றம் செய்யக்கூடாது என்பது சாலை மறியலில் ஈடுபட்டுள்ள கிராம மக்களின் கோரிக்கையைத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலர்கள், உரிய நடவடிக்கை எடுப்பதாக சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவாரத்தை நடத்தியதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details