கோவை: கோவை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று (ஜூலை 19) பிஷப் அப்பாசாமி கல்லூரியில், திருமண்டல பேராயர் திமோதி ரவீந்தர் தலைமையில் நடைபெற்றது.
அப்போது நிர்வாகக் குழு உறுப்பினர் நேச மெர்லின், சி.எஸ்.ஐ. நிர்வாகத்திற்குச் சொந்தமான நிலம் குறைவான விலைக்கு விற்பனைசெய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக இரு குழுக்களாகப் பிரிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்கள், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.