கோயம்புத்தூர்: கடந்த ஒரு வாரமாக கரோனா நோய்த்தொற்று அதிகரித்துவருவதால் மாவட்ட நிர்வாகம் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
குறிப்பாக கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்கள் 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட பரிசோதனையில் கரோனா இல்லை என்பதற்கான சான்று அல்லது இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்திக்கொண்ட சான்றை காட்டிய பிறகே அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆனால் வாளையார் சோதனைச்சாவடியில் வழக்கம்போல இ-பதிவு செய்துள்ளனரா என மட்டும் சோதித்து தமிழ்நாடு எல்லைக்குள் அனுப்பிவருகின்றனர். இந்நிலையில், கேரளாவிலிருந்து கோவை வருபவர்களுக்கு வாளையார் சோதனைச் சாவடியில் 5ஆம் தேதி முதல் இ-பதிவுடன் கரோனா இன்மை சான்று, அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்று உள்ளதா எனச் சோதனை மேற்கொள்ளப்படும் எனக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இ-பதிவுடன் கரோனா இன்மை சான்று கட்டாயம் மேலும், காவல் துறையின் சோதனைக்கு அஞ்சி ஒரு வழிப்பாதையில் தமிழ்நாடு எல்லைக்குள் வரும் வாகனங்களைத் தடுக்க, காவல் துறையினர் புதிதாகத் தடுப்புகளை அமைத்துள்ளனர்.
இதையும் படிங்க: அதிகரிக்கும் கரோனா... கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள்!