கோயம்புத்தூர்: கோவை அடுத்த பேரூர் பகுதியை சேர்ந்த பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டு, கல்லூரி மாணவிகளிடம் அவர் வாட்ஸ்அப் மூலம் பேசிய ஸ்கிரீன் ஷாட்டுகள் வெளியானது.
இதனையடுத்து, பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பேராசிரியர் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க கல்லூரியில் வளாக குறைதீர்ப்பு குழு கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த கமிட்டி விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அதில், "பேராசிரியர் மீதான பாலியல் புகார் அளித்த மாணவர் கொடுத்த வீடியோ ஒன்றேகால் மணி நேரம் இருப்பதாகவும், புகார் அளித்த மாணவரிடம் விசாரித்த போது மூன்று மணி நேரத்திற்கும் மேல் வீடியோ இருப்பதாக தெரிவித்தார். ஆனால் முழுமையான வீடியோவை புகார் அளித்த மாணவர் கொடுக்காததால் அது குறித்து முடிவுக்கு வர முடியவில்லை.