கோவை மக்களவை தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் இறுதி கட்டமாக புலியகுளம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின் இறுதி தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "கோவை மக்களவைத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தனது தேர்தல் அறிக்கையில் ஜிஎஸ்டியால் பாதிப்பு இருப்பது உண்மை, அதைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.