தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரியங்கா காந்தி கைது: கோவையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் - கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிரியங்கா காந்தி கைதானதைக் கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கோவையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

By

Published : Oct 5, 2021, 4:05 PM IST

கோயம்புத்தூர்:உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை பிரியங்கா காந்தி பார்க்க சென்ற பொழுது, அவர் கைது செய்யப்பட்டு, வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். இதனைக்கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை காங்கிரஸ் கட்சியின் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற, இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

அப்போது காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க:அமைச்சர் துரைமுருகன் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details