கோயம்புத்தூர் மாவட்டம் தாமரைக்குளம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வெகு விமரிசியாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பேராசிரியர் டாக்டர் இ.பாலகுருசாமி (யு.பி.எஸ்.சி உறுப்பினர், புது தில்லி)கலந்து கொண்டார். விழாவில் மாணவர்களுக்கு பட்டயங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
பின்னர் விழாவில் பேசிய அவர், "ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் படிப்பை முடித்து வெளிவருவதால், நீங்கள் படிப்பை முடித்து போகும் போது தனித்திறமையுடன் திகழ வேண்டும். இந்தியாவில் படிக்கும் பொறியாளர்களுக்கு மற்ற நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது.