கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையினால் கடந்த எட்டு ஆண்டுகளை விட மிக மோசமான நிலையில் நாடு உள்ளது. ஆறாண்டு காலத்தில் நாடு எவ்வளவு சீரழிந்துள்ளது என்பதை இந்தப் பொருளாதாரக் கொள்கை காட்டுகிறது.
இலங்கையில் அனைவருக்கும் அதிகாரப் பகிர்வு வர வேண்டும். எனவே இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி ஒரு அழுத்தத்தை தரவேண்டும். இலங்கையின் வட கிழக்கு மாகாணங்களை ஒருங்கிணைத்து தமிழர்களுக்கு அதிகார பகிர்வு தந்து அங்கு தமிழ் மாநிலம் அமைய மோடி இலங்கை அதிபருக்கு அழுத்தம் தர வேண்டும்’ என்றார்.