தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நகை வாங்குவதுபோல் நடித்து 2 சவரன் நகை திருட்டு - போலீசார் தீவிர விசாரணை! - Coimbatore crime news

அன்னூரில் நகைக்கடை ஒன்றில் நகை வாங்குவதுபோல நடித்து 2 சவரன் நகையை திருடிச் சென்றவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நகை வாங்குவதுபோல் நடித்து 2 சவரன் நகை திருட்டு - போலீசார் தீவிர விசாரணை!
நகை வாங்குவதுபோல் நடித்து 2 சவரன் நகை திருட்டு - போலீசார் தீவிர விசாரணை!

By

Published : Aug 10, 2022, 10:51 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரில் ஜெயக்குமார் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 9) பிற்பகல் கடைக்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர், ஊழியர்களிடம் தன்னை வங்கி மேலாளர் என அறிமுகப்படுத்தியுள்ளார். தொடர்ந்து நகை டிசைன்களை காட்டுமாறு கூறியுள்ளார்.

அப்போது வெவ்வேறு டிசைன்களை காட்டி அதை எடுக்குமாறு சொல்லிவிட்டு, கடை ஊழியர் அசந்த நேரத்தில் 2 சவரன் தங்கச் செயினை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக வெளியேறியுள்ளார். வாடிக்கையாளர் மாயமானதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பெண் ஊழியர், நகைகளை சரி பார்த்தபோது 2 சவரன் தங்கச் செயின் காணாமல் போனது தெரிய வந்தது.

நகை வாங்குவதுபோல் நடித்து 2 சவரன் நகை திருட்டு - போலீசார் தீவிர விசாரணை!

இது தொடர்பான புகாரின் பேரில் நகைக்கடைக்கு சென்ற அன்னூர் காவல்துறையினர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, தங்கச் செயினை திருடிச் சென்றவரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:சிசிடிவி: அதிமுக பிரமுகர் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருட்டு

ABOUT THE AUTHOR

...view details