தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் பத்திரிகையாளர்களுக்கு கரோனா பரிசோதனை!

கோவை: கரோனா வைரஸ் தொற்றை உறுதிபடுத்த செய்யப்படும் பிசிஆர் முறை பரிசோதனை, கோவையில் பத்திரிகையாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்டது.

_pcr_test_
_pcr_test_

By

Published : Apr 28, 2020, 5:09 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக்கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தருணத்திலும் காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் தங்களது பணிக்காக வெளியே சுற்றித்திரிய வேண்டிய சூழல் உள்ளது. இதன் காரணமாக கரோனா வைரஸ் தொற்றை உறுதிபடுத்த மேற்கொள்ளப்படும் சோதனைகளில் ஒன்றான ரேபிட் டெஸ்ட் கிட் கோவைக்கு வந்தவுடன் முதலில், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், அனைவருக்கும் ரேபிட் டெஸ்ட் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அந்த சோதனை அதிகம் சரியான முடிவைத் தருவதில்லை என்பதால், கரோனா உறுதிபடுத்தும் பி.சி.ஆர் எனப்படும் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

பிசிஆர் முறை பரிசோதனை

இந்நிலையில், இன்று கோவை சித்தாபுதூரில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் பத்திரிகையாளர்களுக்கு பி.சி.ஆர். சோதனை செய்யப்பட்டது. இன்று முதல் கட்டமாக 100 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் நாளை வெளியிடப்படுமென மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மீதமுள்ளவர்களுக்கு நாளை பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி நேரில் பார்வையிட்டார்.

கோவையில் பத்திரிகையாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை

இதையும் பார்க்க:'பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கரோனாவை ஒழிக்க முடியும்' - முதலமைச்சர் பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details