கோயம்புத்தூர்: மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உழவர் போராடிவந்தனர். இந்நிலையில், வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுவதாக (Govt to Repeal Farm laws)பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) நேற்று (நவம்பர் 19) காலை அறிவித்தார்.
நரேந்திர மோடியின் இந்த அறிவிப்பை உழவர் கொண்டாடிவருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் (President of the Tamil Nadu Farmers Association) சு. பழனிசாமி கூறியதாவது, “வேளாண் சட்டத்தைத் (Farm Laws) திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகரில் நடைபெறும் போராட்டமானது 359 நாள் நிறைவுற்ற நிலையில், திடீரென வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படுவதாக (Govt to Repeal Farm laws)பிரதமர் அறிவித்திருக்கிறார்.
இந்தப் போராட்டம் ஆரம்பித்த நாள் முதல் பல்வேறு நிகழ்வுகளைக் கடந்துவந்திருக்கிறோம். இன்றும்கூட பல்வேறு வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்துவருகிறோம். இந்நிலையில் தற்போது வேளாண் சட்டங்களைத் (Farm Laws) திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருப்பது காலம் கடந்த அறிவிப்பாகவே கருதுகிறோம்.