கோயம்புத்தூர்:கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், "நூலகம் திறப்பது நல்ல விஷயம், அது ஒரு அறிவு சார்ந்த விஷயம் என்பதால் வரவேற்கத்தக்க விஷயம். இது போல அனைத்து ஊர்களிலும் திறந்தாலும் நல்லது தான். மகளிர் உரிமை திட்டத்தைப் பொறுத்தவரை திமுக தேர்தலுக்கு முன்பு அனைத்து பெண்களுக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்து தேர்தலில் வெற்றி பெற்றார்கள்.
ஆனால் வெற்றி பெற்ற பிறகு தகுதியான பெண்களுக்கு மட்டும்தான் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று கூறுவது கண்டிக்க கூடிய விஷயம். தேர்தலுக்கு முன்பு கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான் நல்ல அரசு. எனவே வாக்குறுதி அளித்தபடி அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கட்டாயம் வழங்க வேண்டும் என்பதுதான் தேமுதிகவின் நிலைப்பாடு.
நான் தற்பொழுது என்னுடைய இளைய மகனின் அடுத்த படத்திற்கான பட பூஜைக்காக வந்துள்ளேன். அவரது பட பூஜை பாலக்காட்டில் நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்ள தான் நான் வந்துள்ளேன். விஜய பிரபாகரனின் இசைக்கச்சேரி இந்தியாவிலேயே முதன்முறையாக மிகப்பெரிய அளவில் மும்பையில் நவம்பர் 25 ஆம் நடைபெற உள்ளது. கேப்டன் (விஜயகாந்த்) நன்றாகவும் சிறப்பாகவும் இருக்கிறார்.
இதையும் படிங்க: இலங்கை சிறையில் இருந்த 22 தமிழக மீனவா்கள் சென்னை திரும்பினர்!