பொள்ளாச்சி நெகமம் அடுத்த மெட்டுவாவி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் செல்வராஜ்-வனிதாமணி. இவர்களுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகின்ற நிலையில், 4 மகன்கள், ஒரு மகன் என 5 குழந்தைகள் உள்ளனர். இதனையடுத்து மீண்டும் கர்ப்பமான வனிதாமணி, 5 மாத சிசுவின் கரு வயிற்றில் இருக்கையில், கருக்கலைப்பு செய்ய முடிவெடுத்துள்ளார். இதுகுறித்து, ஆயுர்வேத மருத்துவர் முத்துலட்சுமியிடம் செல்ஃபோனில் பேசியுள்ளார்.
கருக்கலைப்பு செய்ய முயன்ற கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம்: போலி மருத்துவரின் வீட்டிற்கு சீல்!
கோவை: பொள்ளாச்சி அருகே கருக்கலைப்பு செய்ய முயன்ற கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தில், போலி மருத்துவர் தலைமறைவாகியதையடுத்து அவரது மருத்துவமனை மற்றும் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது.
மறுநாள், மருத்துவர் முத்துலட்சுமி வனிதாமணிக்கு வடசித்தூரில் தனது வீட்டில் வைத்து கருக்கலைப்பு ஊசி போட்டுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் வனிதாமணி உடல்நிலை மோசமானதாகக் கூறப்படுகிறது. உடனடியாக வனிதாமணியை காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனை செல்கையில், போகும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் வனிதாமணியை மெட்டுவாவியில் உள்ள அவரது இல்லத்தில் விட்டுவிட்டு டாக்டர் முத்துலட்சுமி தலைமறைவானார். இதுகுறித்து வனிதாமணியின் மகன் மாரிமுத்து அளித்த புகாரின் பேரில் நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான போலி டாக்டர் முத்துலட்சுமியை தேடிவருகின்றனர்.
இந்நிலையில், சுகாதாரத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணா தலைமையில் அதிகாரிகள் போலி டாக்டர் முத்துலட்சுமியின் வீட்டை ஆய்வு செய்து, அவரின் வீட்டிற்கு சீல் வைத்தனர். இதுகுறித்து கிருஷ்ணா கூறுகையில், “இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்தபோது முத்துலட்சுமி அரசு அங்கீகாரம் பெறாமல் மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் முத்துலட்சுமியின் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது. போலி மருத்துவர் முத்துலட்சுமி தலைமறைவாக இருப்பதால் அவர் பிடிபட்டவுடன் முழு விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.