கோயம்புத்தூர்: விடுதலைப் புலிகள் கட்சித் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆண்டு தோறும் கொண்டாடுவது வழக்கம்.
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் பிரபாகரனின் 67ஆவது பிறந்த நாளை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாட்டம் காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் என்ற புகைப்படம் அச்சிட்ட கேக் வெட்டி குழந்தைகளுக்கு வழங்கி கொண்டாடினர்.
அப்போது பிரபாகரன் வாழ்க, அவரின் புகழ் வளர்க என்று அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
இதையும் படிங்க:எம்ஜிஆரின் மூத்த சகோதரர் மகள் லீலாவதி காலமானார்