தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊதிய உயர்வுக் கோரி விசைத்தறி தொழிலாளர்கள் கோவை ஆட்சியரிடம் மனு! - கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி தொழிலாளர்கள் கூட்டமைப்பு தலைவர் பழனிச்சாமி

கோவை : ஊதிய உயர்வு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் கே.ராஜாமணியிடம் கூலி நெசவு விசைத்தறி தொழிலாளர்கள் மனு அளித்தனர்.

Power loom workers appeal to the Coimbatore collector for wage hike
ஊதிய உயர்வுக் கோரி விசைத்தறி தொழிலாளர்கள் கோவை ஆட்சியரிடம் மனு!

By

Published : Mar 2, 2020, 10:30 PM IST

கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு பணி செய்யும் தொழிலாளர்கள் கோவை ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

அம்மனுவில், ”கோவை - திருப்பூர் ஆகிய இரு மாவட்டங்களில் மட்டும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக 95% விசைத்தறி தொழிலாளர்கள் நாள் கூலி அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். கூலிக்கு நெசவு தொழில் செய்யும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதிய உயர்வு, போனஸ், தொழிற்கூடங்களில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், தேசிய விடுமுறை நாள்களுக்கு ஊதியம், பஞ்சப்படி, இ.எஸ்.ஐ., உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.

ஊதிய உயர்வுக் கோரி விசைத்தறி தொழிலாளர்கள் கோவை ஆட்சியரிடம் மனு!

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் தலைவர் பழனிச்சாமி, “கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு பணி செய்யும் தொழிலாளர்களுக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக எந்தவித ஊதிய உயர்வும் வழங்கப்படாமல் இருக்கிறது. இதுகுறித்து பலமுறை இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும், ஜவுளி உற்பத்தியாளர்கள் யாரும் அதில் கலந்துகொள்ளவில்லை. கூட்டம், பேச்சுவார்த்தை என எதிலும் எந்தவொரு பயனும் ஏற்படவில்லை. தொடர்ந்து போராடி வருகிறோம். மாவட்ட தொழிலாளர் அலுவலகத்திலும் இது தொடர்பில் கோரிக்கை விடுத்திருந்தோம், அதற்கும் ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் எந்த பதிலும் வரவில்லை. ஆறு ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் தொடரும் விசைத்தறி தொழிலாளர்கள் பிரச்னைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க : '50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை தற்போதுள்ள அரசு செய்துள்ளது' - அமைச்சர் வேலுமணி

ABOUT THE AUTHOR

...view details