தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அங்கொடா லொக்கா வீட்டில் கைப்பற்றப்பட்டது போதை மருந்துகளா? - அங்கோடா லொக்கா இறப்பு

கோயம்புத்தூர்: உயிரிழந்த அங்கொடா லொக்கா வீட்டில் பவுடர் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, கைப்பற்றப்பட்ட மருந்துகள் ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளன.

home
home

By

Published : Aug 5, 2020, 12:42 PM IST

Updated : Aug 5, 2020, 12:49 PM IST

இலங்கையைச் சேர்ந்த நிழல் உலக தாதாவான அங்கொடா லொக்கா, கடந்த ஜூலை 3ஆம் தேதி கோவையில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இவரது மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்துவருகிறது. இதுதொடர்பாக முதலில் பீளமேடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

பின்னர் இந்த வழக்கு மாற்றப்பட்டு, சிபிசிஐடி டிஎஸ்பி ராஜூ தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும், கோவையில் உள்ள அங்கொடா லொக்கா வீட்டிலும் சிபிசிஐடியினர் நேற்று (ஆகஸ்ட் 04) அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் பவுடர் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்தப் பவுடர் மருந்துகள் ஆய்வகத்தில் ஆய்வு செய்வதற்காக தற்போது அனுப்பப்பட்டுள்ளன. அங்கொடா லொக்கா கோவையிலிருந்து புரோட்டின் பவுடர்களை உடற்பயிற்சி மையங்களுக்கு சப்ளை செய்துவந்ததாகக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது கிடைக்கப்பெற்ற பவுடர் மருந்துகள் புரோட்டின் பவுடர்களா அல்லது வேறு ஏதேனுமா என்று ஆய்வின் முடிவில்தான் தெரியவரும்.

இதையும் படிங்க:இலங்கை தாதா அங்கொட லொக்கா வழக்கில் திடீர் திருப்பம்!

Last Updated : Aug 5, 2020, 12:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details