தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’காலாவதியான தீவனங்கள் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ - Outdated Poultry feed news

கோயம்புத்தூர்: ஆவின் மூலம் வழங்கப்படும் கால்நடை தீவனங்கள், காலாவதியானதாக வந்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

pollachi
pollachi

By

Published : Feb 27, 2020, 6:20 PM IST

பொள்ளாச்சி அருகே உள்ள போளியகவுண்டனூர் ஊராட்சியலிருந்து, சுந்தர கவுண்டனூர் வரை ரூ.33 லட்சம் செலவில் இணைப்புச் சாலை போடுவதற்கான, பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ”காங்கேயம் பகுதியில், ஆவின் மூலமாக வழங்கப்படும் கால்நடை தீவனங்கள், காலாவதியாகியுள்ளதாக புகார் வந்துள்ளன. கால்நடை மருத்துவக் குழுவினர் இதுகுறித்து ஆய்வுசெய்து வருகின்றனர்.

உடுமலை ராதாகிருஷ்ணன் - அமைச்சர்

தகுதி இல்லாத தீவனங்களாக இருந்தால் அதை அப்புறப்படுத்திவிட்டு, மாற்றுத் தீவனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தீவனங்களை பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக, சாக்குப் பைகளில் அனுப்பப்படும். கோடை காலம் நெருங்கி வருவதால் அனைத்து மாவட்டங்களிலும், கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

தீவன பற்றாக்குறையை சமாளிக்க, இந்தாண்டு முன்கூட்டியே அதிக தீவனங்களை உற்பத்தி செய்து, பற்றாக்குறை ஏற்படும் பகுதிகளுக்கு அனுப்ப கால்நடை பராமரிப்புத் துறை தயார் நிலையில் உள்ளது” என்றார்.

இதையும் படிங்க:'ஆவின் பொருட்களை வாங்குவதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் வளர்ச்சியடைகிறது'

ABOUT THE AUTHOR

...view details