கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பொது இடங்கள், அரசு கட்டிடங்கள், சுவர்கள், தெருவிளக்கு கம்பங்கள், சாலை மையத்திட்டுகள், பாலங்கள் மற்றும் இயற்கை வளங்களில் விளம்பரங்கள் எழுதவோ சுவரொட்டிகளை ஒட்டவோ கூடாது என கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
கோவை மாநரகாட்சி பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என அறிவிப்பு! - சுவரொட்டிகள்
கோவை மாநகராட்சி பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநரகாட்சி பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என அறிவிப்பு
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அறிவிப்பை மீறினால் சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனம் தொழிற்சங்கங்கள் அரசியலமைப்புகள் பொது நிகழ்ச்சி மற்றும் குடும்ப நிகழ்ச்சிக்காக சுவரொட்டி வைப்பவர்கள் ஆகியோருக்கு அபராதம் விதிப்பதுடன் குற்றவியல் வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 1 கோடி மரக்கன்றுகள் நட திட்டம் - காவேரி கூக்குரல் அமைப்பு