கோயம்புத்தூர்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம், லியோ. லியோ படத்தை செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து உள்ளது. லியோ படம் குறித்த அப்டேட் தொடங்கிய நாள் முதலே பல்வேறு சர்சைகளைச் சந்தித்து வருகிறது. முன்னதாக “நா ரெடிதான் வரவா” பாடலில் விஜய் சிகரெட் பிடிப்பது தொடர்பான காட்சிகள், டிரெய்லரில் விஜய் ஆபாச வசனம் பேசியது போன்ற பல்வேறு சர்சைகளைச் சந்தித்து உள்ளது.
மேலும், லியோ படத்திற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. குறிப்பாக, ரசிகர்களின் சிறப்பு காட்சியாக 4 மணி காட்சிக்கு அரசு அனுமதி மறுத்து உள்ளது. மேலும், பேனர் மற்றும் போஸ்டர்கள் ஒட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல சர்ச்சைகள் மத்தியில் லியோ படம் நாளை வெளியாக உள்ள நிலையில், தற்போது விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடத் தொடங்கி உள்ளனர்.