கோவை மாவட்டத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. 20 முதல் 400 ஏக்கர் வரை பரப்பளவு கொண்ட குளங்களில் மீன்கள் வளர்க்கப்பட்டு ஆண்டுதோறும் ஏலம் விடுவது வழக்கம். அவ்வாறு மீன்பிடிக்க ஒப்பந்தம் எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் உள்நாட்டு வகை மீன்களை தவிர தடைசெய்யப்பட்ட மீன்களும், வெளிநாட்டு வகை மீன்களும் அதிகளவில் வளர்க்கப்படுகிறது. அதனால், குளத்தின் அடியில் மீன் கழிவுகள் சேர்ந்து நிலத்தடியில் நீர் செல்லாத வகையில் தடுப்பதாக சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கவுசிகா நதி மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் கூறுகையில், "வியாபார நோக்கத்திற்காக வளர்க்கப்படும் மீன்களுக்கு கோழிக் கழிவுகள் போன்றவை உணவாக வழங்கப்படுகிறது. அதிகளவில் மீன்கள் வளர்க்கப்படுவதால் மீன் கழிவுகள் நீரின் அடியில் தேங்கி நீர் நிலத்திற்குள் செல்லாமல் அப்படியே ஆவியாகிறது.