பொள்ளாச்சி ஆறுமுகநேரியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது நண்பர் ஒருவர் மூலம் வால்பாறையில் பெண் இருப்பதாக அறிந்து பெண் பார்க்கச் சென்றுள்ளார். அங்கு சுரேஷ் ஆனந்தன் என்பவரின் மகள் சோபியாவை பெண் பார்த்துள்ளார்.
இவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் நான்காம் தேதி அம்பராம்பாளையத்தில் உள்ள கோயிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்று நான்கு நாட்களில் சோபியா தொடர்ந்து வாந்தி எடுத்ததால், மருத்துவ பரிசோதனை செய்தபோது கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டன் சோபியாவிடம் விசாரித்ததில் அவருக்கு ஏற்கனவே வால்பாறையைச் சேர்ந்த தயாளன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது தெரியவந்தது.