மக்களவைத் தேர்தல் பரப்புரைக் களம் சூடு பிடித்துள்ள நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் அ.தி.மு.க வேட்பாளர் மகேந்திரனை ஆதாரித்து மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
பெங்களூருவைப் போல பொள்ளாச்சி மாறும்: நிதின் கட்காரி வாக்குறுதி...! - பொள்ளாச்சி
கோயம்புத்தூர்: பெங்களூருவைப் போல பொள்ளாச்சி மாறும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி வாக்குறுதியளித்துள்ளார்.
அப்போது அவர் பேசுகையில், நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த பொள்ளாச்சி-கோவை சாலை திட்டம் மகேந்திரன் அவர்களால் என்னிடம் கொண்டுவரப்பட்டு தற்போது அது புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல் பொள்ளாச்சி-திண்டுக்கல் சாலை 5000 கோடி ருபாய் செலவில் திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூருவை போல பொள்ளாச்சி கண்டிபாக மாறும் என வாக்குறுதியளித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் பல திட்டங்களை வகுத்து தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்கிறார். மேலும் 7லட்சத்து50ஆயிரம் கோடி ருபாய் தமிழகத்தில் உள்ள சாலைக்கு ஒதுக்கி உள்ளேன் எனத் தெரிவித்தார்.