தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொதுமக்கள் நலன் கருதி கண்காணிப்புக் கேமராக்கள் வழங்கிய விஜய் ரசிகர்கள்! - cctv fixed by vijay fans club

கோவை: பொள்ளாச்சியில் விஜய் மக்கள் மன்றத்தின் இளைஞர் அணி சார்பில் பொதுமக்கள் நலன் கருதி ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்காணிப்புக் கேமராக்களை விஜய் ரசிகர்கள் போலீசாரிடம் வழங்கினர்.

pollachi-vijay-fans-club

By

Published : Oct 25, 2019, 9:41 AM IST

Updated : Oct 25, 2019, 10:16 AM IST

கண்காணிப்புக் கேமராக்களை வழங்கிய விஜய் ரசிகர்கள் கூறும்பொழுது, பொள்ளாச்சி, திருப்பூர், பல்லடம் சாலையில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்றுவருகின்றன.

பள்ளிகள் அதிகம் உள்ள இப்பகுதியில் பொது மக்களின் நலன் கருதியும், குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் இந்த சிசிடிவி கேமராக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் பிகில் படம் திரையிடுவதையடுத்து, அதை வரவேற்கும் விதமாக இந்தச் சேவையை செய்துள்ளோம் என தெரிவித்தனர்.

பொள்ளாச்சி நகர விஜய் இளைஞர் அணி

இந்த நிகழ்வில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் கலந்து கொண்டு கேமராக்களைப் பெற்றுக்கொண்டபின், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இதையும் படிக்க:#BigilVijay விஜய் ரசிகர்கள் செய்த காரியத்தை நீங்களே பாருங்க..!

Last Updated : Oct 25, 2019, 10:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details