கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே தேவம்பாடி வலசுவைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் தனது உறவினருடன் தனக்கு சொந்தமான மாருதி வேனில் மளிகை கடைக்கு சென்றார். மளிகை பொருட்கள் வாங்கிக்கொண்டு வெங்கடேசா காலணி வழியாக தேவம்பாடி வலசுவை நோக்கி சென்ற போது மாருதி வேனின் முன்புறம் உள்ளபேட்டரி ஒயரில் மின் கசிவு ஏற்பட்டுத் தீபிடித்தது.
மாருதி வேனில் பற்றி எறிந்த தீ - பொதுமக்கள் பீதி - தீயணைப்புத்துறையினர்
கோவை: பொள்ளாச்சி அருகே நடுரோட்டில் சென்றுகொண்டிருந்த மாருதி வேனில் திடீரென தீப்பற்றி எறிந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
maruthi van
இதனைக் கண்டு சுதாரித்துக் கொண்ட சக்திவேல், மாருதி வேனிலிருந்து இறங்கினார். சாலையில் சென்றுகொண்டிருந்த மாருதி வேனில் தீப்பற்றி எறிந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மீட்புத் துறையினர் மேலும் தீ பரவாமல் அணைத்து கட்டுப்படுத்தினர்.