பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் தினசரி 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆழியார், வால்பாறை போன்ற இடங்களுக்குப் பொது மக்கள் செல்கின்றனர். இந்நிலையில், புளியகண்டி பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்பு சாலையை அகலப்படுத்தும் பணியும், மேம்பாலம் கட்டும் பணியும் தொடங்கப்பட்டன.
ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த இந்த பாலப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால், இந்தப் பகுதியில் பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களுக்கும் அச்சத்துடன் இந்த சாலையைக் கடந்து செல்கின்றனர்.