தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு மயிலம் தீபாவளி கொண்டாட்டம்!

கோவை: பொள்ளாச்சி வடசித்தூர் பகுதியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒன்று கூடி மயிலம் தீபாவளி கொண்டாடினர்.

mailam deepavali

By

Published : Oct 29, 2019, 9:39 AM IST

பொள்ளாச்சியை அடுத்துள்ள வடசித்தூர் பகுதியில் மயிலம் தீபாவளி கொண்டாடப்பட்டது. தீபாவளிக்கு அடுத்த நாள் மயிலம் தீபாவளி கொண்டாடப்படுவது வடசித்தூர் பகுதி மக்களின் வழக்கம்.

அவ்வாறு கொண்டாடப்பட்ட இவ்விழாவில் வடசித்தூரிலிருந்து வெளியூரில் திருமணம் செய்துகொடுக்கப்பட்ட பெண்கள், வெளியூர், வெளிநாடுகளில் வேலைபார்ப்பவர்கள் என அனைவரும் தங்கள் சொந்த பந்தங்களுடன் கலந்து கொண்டனர்.

மயிலம் தீபாவளி கொண்டாடிய மக்கள்

சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களும் ஒன்று கூடி இந்த மயிலம் தீபாவளியை கொண்டாடினர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த கீர்த்தி தெரிவிக்கையில், "இந்த விழாவானது ஆண்டாண்டு காலமாகக் கொண்டாடப்படுகிறது. தீபாவளியை விட இந்த மயிலம் தீபாவளியைத்தான் இந்த பகுதி மக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடுகின்றனர். சாதி, மதங்களைக் கடந்து நல்லிணக்கத்தோடு நடைபெறும் இந்த விழா எங்களுக்கு அடுத்து வரும் தலைமுறைக்கும் எடுத்துச் செல்லவேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம்" என்றார்.

இதையும் படிங்க:ஓடும் ரயிலில் ஏறி தவறி விழுந்த பயணியைக் காத்த காப்பான்! - வெளியான காணொலி

ABOUT THE AUTHOR

...view details