தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாதாள சாக்கடை திட்ட பணிகள் ஆய்வு! - சட்டமன்ற உறுப்பினர்

பொள்ளாச்சி: பாதாள சாக்கடை திட்ட பணிகளை பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினரும் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பொள்ளாச்சி ஜெயராமன் நேரில் ஆய்வு

By

Published : Jun 15, 2019, 2:48 PM IST


பொள்ளாச்சியில் கடந்த ஆண்டு பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடங்கியது, இவை தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளன. இப்பணிக்காக சுமார் 160 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

பொள்ளாச்சி ஜெயராமன் நேரில் ஆய்வு

பொள்ளாச்சி நகர் பகுதியில் உள்ள 36 வார்டுகளிலும் நடைபெற்று வரும் இப்பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வீதிகளில் தோண்டப்பட்ட பள்ளங்களை மூடும் பணி நடைபெற்று வருகிறது. இதனை பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினரும் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது இப்பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளையும் ஒப்பந்ததாரர்களை கேட்டுக்கொண்டார்.

இவருடன் பொள்ளாச்சி நகர செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டு அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details