தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஆனைமலைப்பகுதியில் உதவித்தொகை கிடைப்பதில்லை' - மனு அளித்த பழங்குடியின மக்கள்! - பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம்

கோவை: பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் ஆனைமலை ஒன்றியக் குழு சார்பில் உதவித் தொகை வழங்க கோரி மனு அளித்தனர்.

petition

By

Published : Sep 26, 2019, 9:53 AM IST

பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியரிடம் ஆனைமலை ஒன்றியக் குழு சார்பில் மனு வழங்கப்பட்டது. அந்த மனுவில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனச்சரகங்கள் பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி, வால்பாறை, டாப்சிலிப், அமராவதி என 18 வனக் கிராமங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிக் தொகை வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவித் தொகை வழங்க கோரி மனு

குறிப்பாக, திவான்சா புதூரில் உள்ள சுமிதா நகரில் மலசார் இனப்பழங்குடி மக்கள் வசித்து வந்தனர். 1994ஆம் ஆண்டு மலசர் இனப்பழங்குடி மக்களை கொத்தடிமை வாழ்வில் இருந்து மீட்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ், தனியார் தோட்டங்களில் உள்ள குடியிருப்புகளில், மலசார் இனமக்கள் குடியமர்த்தப்பட்டனர். இதனிடையே அந்த வீடுகள் தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இந்நிலையில் புதிய கான்கிரீட் வீடுகளும், பட்டா இல்லாத மக்களுக்கு அரசின் இலவச பட்டா வழங்கவும், தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details