கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை, மானாம்பள்ளி, டாப்சிலிப், பொள்ளாச்சி ஆகிய வனச்சரகத்தில் 18 மலைவாழ் கிராமங்கள் உள்ளன. அங்கு காடர் இனத்தைச் சேர்ந்த பழங்குடி இன மக்கள் 3,500 குடும்பத்தினர் அடிப்படை வசதியின்றி வசித்து வருகின்றனர்.
இதன் காரணமாக, பழங்குடி இன மக்கள் வசித்து வரும் இடங்களுக்கு பட்டா வழங்கக் கோரி பழங்குடி இன மக்கள் கடந்த பத்து வருடங்களாக போராடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வன உரிமைச் சட்டத்தின்படி வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடி இன மக்கள் குடும்பங்களுக்கு பட்டா வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதுகுறித்து பழங்குடி இன மக்கள் கூறுகையில், வருவாய்த்துறை சார்பில் பழங்குடி இன மக்கள் வசிக்கும் இடங்களில் நில அளவை செய்து பட்டா தர அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வனத்துறை அலுவலர்கள் அதற்கான ஆவணங்களில் கையெழுத்திடாமல் தாமதப்படுத்தி வருகின்றனர். இதனிடையே, மலைவாழ் மக்கள் வருவாய்த்துறை அலுவலகத்திற்கு செல்லும்போது வனத்துறை அலுவலர்கள் அங்கு வருவதில்லை.