கோயம்புத்தூர்:பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டது உலாந்தி (டாப்சிலிப்) பகுதியாகும், இங்கு உள்ள கோழிக்கமுத்தி, எருமைபாறை, கூமாட்டி உள்ளிட்ட மலைவாழ் கிராமங்களில் சுமார் 700க்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் வனம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் எருமைப்பாறை செட்டில்மெண்ட் பகுதியில் வசிக்கும் ருக்குமணி (70) என்பவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் மேல் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல அங்கிருந்த மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.