கோவை:பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குள்பட்டு ஆறு வனச்சரகப் பகுதிகள் உள்ளன. இதில் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் பகுதி மிகவும் பிரபலமான சுற்றுலா பகுதி ஆகும். இங்கு யானை, புலி, கருஞ்சிறுத்தை, காட்டு மாடு, கருநாகம், புள்ளிமான், காட்டுப்பன்றி அபூர்வ தாவரங்கள், பறவைகள் உள்ளன.
டாப்சிலிப்பில் புலி நடமாட்டம் - வைரல் காணொலி!
பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பில் புலி நடந்துசெல்லும் காணொலி தற்போது வைரலாகப் பரவிவருகிறது.
டாப்சிலிப்பில் புலி நடமாட்டம்
பிரபலமான யானைகளை வளர்க்கும் முகாமாக கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. டாப்சிலிப் வரும் சுற்றுலாப் பயணிகள் வனத் துறை வாகனம் மூலமாக யானைகள் வளர்ப்பு முகாமுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
டாப்சிலிப்பிலிருந்து கோழிகமுத்தி யானைகளை வளர்க்கும் முகாமுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும்பொழுது வனத் துறைக்குச் சொந்தமான அம்புலி இல்லம் அருகே பகலில் புலி ஒன்று வனப்பகுதியில் நடந்துசென்றுள்ளது.