பொள்ளாச்சி காவல் நிலையங்களுக்கு உட்பட்ட நெகமம், கோமங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக வீடுகளின் பூட்டுகளை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்றன.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி சரக காவல் துறையினர் மூன்று தனிப்படை அமைத்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து திருடர்களைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் தாலுக்கா போலீசார் கேரள எல்லையான சோதனைச் சாவடியில் உள்ள கோபாலபுரத்தில் தனியார் பேக்கரி முன்பு, சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டுடிருந்த இரண்டு பேரைப் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டதில் மணிகண்டன், சரவணன் என்ற அந்த இரண்டுபேரும் பழைய குற்றவாளிகள் என தெரிய வந்தது.
திருட்டில் ஈடுப்பட்ட மணிகண்டன், சரவணன் அவர்கள் பொள்ளாச்சி, திருப்பூர் என பல பகுதிகளில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் பணம் திருடியதை ஒப்புக் கொண்டனர். அவர்களிடமிருந்து 30 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
திருடர்களை போலீசார் கைது செய்தனர் இதையும் படிக்க : தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச்சந்தை