கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இயங்கிவரும் சிண்டிகேட் வங்கி கிளையில் கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி முதல் 2016ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரையிலான காலகட்டத்தில் கிளை மேலாளராக தன்ராஜ் என்பவர் இருந்தார். அப்போது வங்கியில் தணிக்கையாளராக சுப்பிரமணியனும் பணியாற்றி வந்துள்ளார்.
பொள்ளாச்சி சிண்டிகேட் வங்கியில் பண மோசடி : சி.பி.ஐ வழக்குப்பதிவு - fraud
கோவை: பொள்ளாச்சி சிண்டிகேட் வங்கியில் 6 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்ட வங்கியின் முன்னாள் கிளை மேலாளர் உட்பட 2 பேர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இவர்கள் இருவரும் 35க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தி போலியான ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் தயாரித்து, அதன் பேரில் 6 கோடியே 35 லட்சம் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிண்டிகேட் வங்கியின் கோவை மண்டல மேலாளர் சிவராமன் அளித்த புகாரின் அடிப்படையில், சி.பி.ஐ காவல்துறையின் கண்காணிப்பாளர் மைக்கேல் ராஜ் தலைமையிலான அதிகாரிகள் தன்ராஜ் உட்பட இரண்டு பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.