கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மார்ச்ச நாயக்கன்பாளையம் ஊராட்சி, கணபதி பாளையத்தில் செயல்பட்டுவந்த எலைட் சால்வன்ட் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தில், அனுமதியின்றி யூரியா உர வகைகளைப் பயன்படுத்தி ஒட்டக்கூடிய பசைகள் தயாரித்துவருவதாக பொள்ளாச்சி சார் ஆட்சியருக்குத் தொடர்ந்து தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பொள்ளாச்சி சார் ஆட்சியர் தலைமையிலான அலுவலர்கள் தனியார் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், நிறுவனத்தில் 45 கிலோ கொண்ட 927 யூரியா மூட்டைகள் பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, உர மூட்டைகள் அனைத்தையும் கைப்பற்றி பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் நிறுவனத்தை மூடி சீல்வைத்தார்.