தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன், வசந்த்குமார், சதீஷ், பாபு, ஹெரோன் பால், அருளானந்தம், அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், குற்றவாளிகள் அனைவருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டு, விசாரணை இன்று (அக்.28) காணொளி மூலம் நடைபெற்றது. பின்னர் விசாரணையை நவம்பர் 2 ஆம் தேதிக்கு கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி ஒத்திவைத்தார்.