பொள்ளாச்சி பாலியல் வழக்கானது கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் நிலையில் நேற்று முந்தினம் (ஜன.05) இவ்வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகர் உள்பட மூன்று பேரை சிபிஐ காவல் துறையினர் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து, அவர்கள் நேற்று (ஜன.06) கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மூவர் மீதும் 376D பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 20ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி நந்தினிதேவி உத்தரவிட்டார்.