பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி அமமுக வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது, "தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சி முடிவுக்கு வரும் நேரம் நெருங்கிவிட்டது. ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடுகிறார்.
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் விவகாரத்தில் ஆளும் கட்சியின் சம்பந்தம் இருக்கிறது என்று பொதுமக்களிடையே சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் பொள்ளாச்சி ஆபாச வீடியோ எடுத்த வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்தால் மட்டும் போதாது, அது உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரிக்கப்பட வேண்டும். சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த வழக்கு ஏன் இன்னும் சிபிசிஐடி விசாரணையிலே இருக்கிறது?
கொச்சியில் செயல்படும் தென்னை வளர்ச்சி வாரியம் பொள்ளாச்சியில் அமைக்கப்படும்"என அவர் உறுதியளித்தார்.
பொள்ளாச்சி பரப்புரையில் டிடிவி தினகரன்