கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி எல்.எம்.எஸ். தனியார் பள்ளி மாணவர்கள் யோகா ஆசிரியர் உடுமலை குணசேகரன் தலைமையில் 104 மாணவர்கள் ஒன்றாகப் பத்து நிமிடத்தில் 31 யோகாசனங்கள் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பள்ளி வளாகத்தில் ரெக்கார்ட்ஸ் அமைப்பு மாணவர்களின் உலக சாதனை நிகழ்ச்சியை அங்கீகரிக்கப் பதிவுசெய்தது, இதில் 104 மாணவர்களும் ஒரே மாதிரியாக பத்து நிமிடத்தில் 31 யோகாசனங்கள் செய்து உலகச் சாதனை நிகழ்த்தினார்கள், இதுவரை அதிகபட்சமாக 26 யோகாசனங்கள் செய்ததே உலகச் சாதனையாக இருந்துவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.