கோவை மாவட்டம் பொள்ளாச்சி, வால்பாறை சாலையில் உள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே இருக்கும் நடுநிலைப் பள்ளியில், நகராட்சி பகுதியில் இருந்துகொண்டு வரும் குப்பை கழிவுகள் இங்கு சேகரிக்கப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் குப்பை வண்டிகளும் அப்பள்ளியில்தான் நிறுத்தப்படுகின்றன. இதனால் மாணவர்களுக்கு நோய்த் தொற்று பரவும் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றது. இதனை கல்வி நிர்வாகம் நகராட்சியிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
குப்பைக் கிடங்காக மாறிய நடுநிலைப்பள்ளி! - நடுநிலைப்பள்ளி
கோவை: பொள்ளாச்சியில் குப்பைக் கிடங்காக மாறிய நகராட்சி நடுநிலைப்பள்ளியை கண்டுகொள்ளாமல் நகராட்சி அலுவலர்கள் அலட்சியப்படுத்துகிறார்கள் என்று மாணவர்களின் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
pollachi school
இது தொடர்பாக, துப்புரவு தொழிலாளர்களிடம் இங்கு கொட்டாதீர்கள், மாணவர்களுக்கு நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளது என்று ஆசிரியர்கள் கூறினால்கூட அவர்களையே மிரட்டுகின்றனர்.
மேலும், இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.