பொள்ளாச்சியில் கடந்த இரண்டு வருடங்களாக பாதாளச் சாக்கடை பணி நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சியில் உள்ள 36 வார்டுகளில் சில குறிப்பிட்ட வார்டுகளில் மட்டுமே பணி முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பொள்ளாச்சி கடைவீதிகளில் அவசர அவசரமாக சாலைகள் போடப்பட்டன. அவ்வாறு போடப்பட்ட சாலைகள் தற்போது குண்டும் குழியுமாக உள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.