பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கடந்த 5ஆம் தேதி மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டு கோபி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மூவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என சிபிஐ தரப்பில் கடந்த 11ஆம் தேதி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், ஹெரன்பாலை 2 நாள்கள் காவலில் எடுத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்தது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ விசாரணை முடிந்து சிறைக்கு திரும்பிய ஹெரன்பால்! - Heranpal returns to jail after CBI probe
கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான ஹெரன்பாலிடம் இரண்டு நாள்கள் சிபிஐ விசாரணை நடத்திய நிலையில், இன்று மீண்டும் கோபி கிளைச்சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
பொள்ளாச்சி
இதனையடுத்து ஹெரன்பாலை சிபிஐ காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், நேற்றிரவு நீதிபதி வீட்டில் ஹெரன்பாலை ஆஜர்படுத்திய சிபிஐ, மீண்டும் கோபிசெட்டிப்பாளையம் கிளைச்சிறையில் அடைத்தனர்.