தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்று இடத்திற்கு பட்டா வழங்கக் கோரி சாலை மறியல் - பொள்ளாச்சி வருவாய்த் துறை

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி மீன்கரை சாலையோரம் வசித்து வந்த மக்களை நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்த முயன்றதால், அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

pollachi public peoples protest
Strap to the alternate location

By

Published : Jun 9, 2020, 5:35 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மீன்கரை சாலையில் உள்ள கண்ணப்பன் நகரை ஒட்டியுள்ள பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக தற்போது பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பலமுறை மாற்று இடத்திற்கு பட்டா வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தும் அரசு கண்டுகொள்ளாத நிலையில், திடீரென நெடுஞ்சாலைத்துறையினர் அவர்களை அப்புறப்படுத்த முயன்றதால் அப்பகுதியிலுள்ள மக்கள் எங்களுக்கு மாற்று இடம் வழங்கினால் மட்டுமே நாங்கள் இந்த இடத்தை விட்டுச் செல்வோம் என மீன்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டதால் தகவல் அறிந்து வந்த மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் பொள்ளாச்சி வருவாய்த் துறையினர், சாலை மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மாற்று இடத்திற்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்து தருவதாக உறுதி அளித்த பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

இதையும் படிங்க:ரூ.1.74 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள்: மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு!

ABOUT THE AUTHOR

...view details