கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழை, எளிய மக்களுக்கு காவல்துறையினர் சார்பில் பல்வேறு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இன்று (ஜூலை 25) பொள்ளாச்சி அருகேயுள்ள கோமங்கலம் காவல் துறையினர் சார்பில் அப்பகுதியில் வசிக்கும் துப்புரவுப் பணியாளர்கள், ஏழை மக்களுக்கு புரதச் சத்து நிறைந்த முட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய துணை கண்காணிப்பாளர்! - pollachi police commissioner
கோவை: பொள்ளாச்சி பகுதியில் தூய்மைப் பணியாளர்களுக்கு துணை காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் கரோனா நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
![தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய துணை கண்காணிப்பாளர்! corono help police pollachi பொள்ளாச்சி செய்திகள் கோவை மாவட்டச் செய்திகள் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவகுமார் pollachi police commissioner corona relief](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8164879-819-8164879-1595658264914.jpg)
இதில், காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் கலந்துகொண்டு நிவாரணப் பொருள்களை வழங்கினார். இதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொள்ளாச்சி கோட்டத்தில் ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைகளில் இடைவெளியை பின்பற்றாத கடை உரிமையாளர்கள், முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தோர், என 500க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 50ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க:தூய்மைப் பணிகளில் முறைகேடு நடக்கிறது: கொங்கு ஈஸ்வரன் குற்றச்சாட்டு!