தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணம் வைத்து சீட்டாடிய 10 பேர் கைது - Police arrests 10 members

கோவை: பொள்ளாச்சி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை தாலூகா காவல் துறையினர் கைது செய்தனர்.

Police arrests 10 members
Police arrests 10 members

By

Published : Nov 29, 2020, 8:59 PM IST

பொள்ளாச்சி அருகில் உள்ள சோழனூர் ஊரில் தனியார் தோட்டத்தில் பணம் வைத்து பெரிய அளவில் சீட்டாட்டம் நடப்பதாக தாலுக்கா காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஆய்வாளர் தங்கபாண்டியன், உதவி ஆய்வாளர் ராஜேஷ்கண்ணா தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று, சீட்டு ஆடி கொண்டிருந்த நபர்களை சுற்றி வளைத்தனர்.

அங்கு பணம் வைத்து சூதாடிய பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த கணபதி, காளீஸ்வரன், முருகானந்தம் உட்பட 10 பேரை தாலுக்கா காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், இவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ஒரு லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: காசிமேட்டில் ஆயுதங்களுடன் ரவுடிகள் கைது

ABOUT THE AUTHOR

...view details