தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்ட பிளாஸ்டிக் நிறுவனத்துக்கு சீல்!

கோவை: பொள்ளாச்சி அருகே சட்ட ஒழுங்கை மீறி செயல்பட்டுவந்த பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனத்திற்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

seal

By

Published : Aug 9, 2019, 1:21 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ரங்கசமுத்திரம் பகுதியில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்படுவதாக கோட்டாட்சியர் ரவிக்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரது உத்தரிவின்பேரில், வட்டாட்சியர் தனிகைவேல் தலைமையிலான வருவாய்த்துறையினர், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ரங்கசமுத்திரம் பகுதியில் செயல்பட்ட நிறுவனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு நடைபெறுவது உறுதிபடுத்தப்பட்டது.

சீல் வைக்கப்பட்ட பிளாஸ்டிக் நிறுவனம்

இதனையடுத்து வட்டாட்சியர் தனிகைவேல் மற்றும் வருவாய்த்துறையினர் அந்த பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனத்திற்கு சீல் வைத்தனர். ஏற்கனவே ரங்கசமுத்திரம் பகுதியில் செயல்பட்ட பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details