தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: பொள்ளாச்சியில் 210 கிலோ கேக் செய்யும் பணி தொடக்கம்! - pollachi paasham cake shop plans to make 210kg cake

கோவை: கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு, பொள்ளாச்சியில் பசுமை கேக் ஷாப், 210 கிலோ கேக் செய்திட முடிவுசெய்துள்ளது.

பொள்ளாச்சி
பொள்ளாச்சி

By

Published : Dec 14, 2020, 6:39 AM IST

கிறிஸ்துமஸ் பண்டிகை வந்தாலே, விதவிதமான கேக் வகைகளைப் பார்த்திட முடியும். சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை பல வகையான கேக்குகளை வாடிக்கையாளர்களுக்குத் தயாரிக்கின்றனர்.

அந்த வகையில், 5 ஸ்டார் உணவக விடுதிகளில் விற்கப்படும் கேக்களுக்கு இணையாக பொள்ளாச்சியில் முதல் முறையாக பசுமை கேக் ஷாப், நடுத்தர மக்கள் விரும்பும் வகையில் உயர்தரமான கேக் வகைகளைத் தயாரித்திட முடிவுசெய்துள்ளது.

அதன்படி, பாதாம், முந்திரி, கரு திராட்சை அத்திப்பழம், ஆப்ரிகாட், டிரை ஜெரி, பேரிச்சை பழம், ஜிஞ்சர் கேன்டி, ஆரஞ்சு கேன்டி, பழரசம் கொண்டு ரசாயனம் கலவை இல்லாத 210 கிலோ கேக் செய்யும் பணியை சூர்யா குழுமம் தொடங்கியுள்ளது. இப்பணியில் கடையின் ஊழியர்கள் உற்சாகமாக ஈடுபட்டுள்ளனர்.

பொள்ளாச்சியில் 210 கிலோ கேக் செய்யும் பணி தொடக்கம்

இது குறித்து பேசிய கடையின் உரிமையாளர் முருகேசன், இயற்கையான மூலப்பொருள்கள் கொண்டு கேக் செய்யும் பணி தொடங்கியுள்ளது. 15 நாள்கள் பதப்படுத்தப்பட்டு கிறிஸ்மஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டுக்கு பொதுமக்கள் விற்பனைக்குத் தரவுள்ளோம்" எனத் தெரிவித்தார். இதுமட்டுமின்றி கடைக்கு வரும் மக்களுக்காக மேஜிக் ஷோ ஒன்றையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ABOUT THE AUTHOR

...view details