தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூன்றாம் நம்பர் லாட்டரி விற்ற இருவர் கைது - பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் மூன்றாம் நம்பர் லாட்டரி]

கோவை: பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் மூன்றாம் நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

online lottery arrest
online lottery arrest

By

Published : Feb 4, 2020, 9:09 AM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் மூன்றாம் நம்பர் லாட்டரி ஆன்லைனில் விற்பனை செய்து வருவதாக கிழக்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட எஸ்.பி. சுஜீத் குமார் உத்தரவின்படி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து பொள்ளாச்சி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சூளேஸ்வரன்பட்டி, செம்பா கவுண்டர் காலனியில் மூன்றாம் நம்பர் லாட்டரி விற்பனையில் முகமது ரஃபி, செல்வகுமார் ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது.

லாட்டரி விற்ற இருவர் கைது

இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் 9 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details